Improve Liver Function | How to Cure Fatty Liver | கல்லீரல், கல்லீரல் பலப்பட




CLICK HERE for the Liver Tracker
#liver #liverdiet #liverrecipes #liversymptoms #livertreatment

Improve Liver Function | How to Cure Fatty Liver | கல்லீரல், கல்லீரல் பலப்பட எனும் இந்த வீடியோ Improve Liver Function | How to Cure Fatty Liver | கல்லீரல், கல்லீரல் பலப்பட பற்றி விளக்குகின்றது.

For More Subscribe
For Health & Food in Tamil
For Tamil Recipes & Cooking
For Simple Healthy Recipes
For Herbs and Herbal Medicine
For Diabetic Patients
For Health & Health Recipes in English

To Read this video article:

Improve Liver Function | How to Cure Fatty Liver | கல்லீரல், கல்லீரல் பலப்பட

கல்லீரல் எவ்வாறு வேலை செய்கிறதென்று பார்ப்போம்.

முதலாவதாக குளுகோசிலிருந்து கிளைகோஜின் என்பதைத் தயாரித்து நம் உடலுக்கு வேண்டிய சக்தியாக சேமித்து வைக்கும் பணியை கல்லீரல் செய்கிறது. ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகமானால் இவ்வுறுப்பு அதைப் பிரித்தெடுக்கிறது. இதன் பயன் கிளைகோஜின் சேமித்து வைக்கப்பட்டு நமக்கு மாபெரும் சக்தியைக் கொடுக்கின்றது. இரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்தால் நமக்கு வேண்டிய குளுகோசை மறுபடியும் மாற்றித் தருகிறது. அதாவது சேமித்து வைக்கப்பட்டுள்ள கிளைகோஜின் குளுகோசாக மாற்றப்படுகிறது. அடுத்ததாக நம் உணவு செரிப்பதற்கான, கொழுப்பை நீக்கத் தேவையான பைல் (BILE) எனப்படும் பித்த நீரை உற்பத்தி செய்கின்றது. பித்தநீரானது கல்லீரலிருந்து இரத்த நாளங்கள் வழியாக பித்த நீர்ப்பையில் சேர்ந்து சிறு குடலுக்கு வந்து சேருகிறது. மேலும் வைட்டமின்கள் கல்லீரல் சேமிக்கப்படுகின்றன A, D, E, K, B12 போன்றவை இதில் அடங்கும்.
உடலுக்கு வேண்டிய மிக முக்கியமான புரோட்டடின்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகக் கல்லீரல் இயங்குகிறது உதாரணமாக ஆல்புமின் (ALBUMIN) இதில் உற்பத்தியாகி கால்சியத்தையும் மற்றும் பலவற்றை இரத்தத்தில் சேர்த்து வைக்கின்றது. ஆல்புமின் இரத்தத்திலுள்ள தண்ணீரின் அளவைக்கட்டுப்படுத்தி திசுக்களுக்கு வேண்டியளவு அனுப்புகிறது. சிகப்பு அணுக்களுக்கான க்ளோபின்யென்ற புரோட்டினை உற்பத்தி செய்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கல்லீரல் உற்பத்தி செய்யும் பைப்ரிகோஜன் ப்ரோதோரோமின் புண்கள் வந்தால் இரத்தம் வெளியேறாமல் உறையவைக்கிறது கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.
ஆயுர்வேதப்படி, பித்தம் அதிகமானால் பிரச்சனைகள் தோன்றும் பித்தமானது புளிப்பான, காரத் தன்மையுள்ள திரவமாகும். பித்த நீர் இரத்தத்திலுள்ள தோஷமாகும், இது வயிறு, கல்லீரல் உதரவிதானம் போன்ற உறுப்புக்களில் அமைந்ததாகும். இது உடல் முழுவதும் பரவி கண்களை, இதயத்தை, மூளையை, தோலை, வேர்வைச் சுரப்பிகளை பாதுகாக்கிறது அதிகமானால் இது உடலில் எந்த உறுப்பிலாவது அதன் அறிகுறிகளைக் காட்டும். இதற்குக் காரணம் அதிகப் புளிப்புள்ள, காரசாரமான பதார்த்தங்களை உண்பதே.
அதிகப்படியான காமவேட்கை, உப்பு அதிகம் சேர்ந்த உணவு, மதுப்பழக்கம், பகல் நேரத்தில் அதிகமாக துங்குதல் போன்றவை ரத்தத்தை, தோலை பாதிக்கும். தசைகள் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதற்குப் பெயர் பாண்டு ரோகம். இக்காரணங்கள் மேலும் தொடர்ந்தால் மஞ்சள் காமாலை நம்மைத் தாக்கும். அதன் விளைவாக தோல் மஞ்சள் நிறத்திலிருக்கும், களைப்பு அதிகமாகயிருக்கும் ஐம்புலன்கள் சரிவர வேலை செய்யாது, குளிர்ந்த, குளிர்ச்சியான பதார்த்தங்களைச் சாப்பிடத்து£ண்டும். து£க்கத்தின் அளவு குறையும். மூளையைப் பாதிப்பதால் சிந்தனை சக்தி தடைப்படும் உற்சாகம், தைரியம் குன்றும், கோபம், பொறுமையின்மை, எரிச்சல், விரக்தி, எதிர்க்கும் சுபாவம் போன்றவை வெளிப்படும்.
ஆயுர்வேதத்தில் கோபத்தை அடக்கினால் கல்லீரல் வேலை பாதிக்கப்பட்டு, பித்த நீர் அதிகமாக சுரக்கும்.

ஆயுர்வேத மருந்துகள், மூலிகை மருந்துகள், வாழ்க்கை முறை போன்றவைகள் நம் உடல் நலத்தைச் சீராக வைக்கும் மனம் அமைதியாகயிருக்க வேண்டும். அவசரகதி வாழ்க்கை கூடாது. பொறுமை, சகிப்புத்தன்மை, கோபமின்மை மிகவும் அவசியம்.
இவற்றைக் கடைப்பிடித்து, ஆயுர்வேத முறைப்படி மருந்து உட் கொண்டால் கல்லீரல் நலம் மேம்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*